கடவுள் குறித்த பெரும்பாலான மனிதர்களின் நிலைப்பாடு

 • இந்த பிரபஞ்சம் எதிலிருந்து உருவாகியதோ அந்த மூல சக்தியே ஆதிமகாசக்தி (கடவுள்) என்று அழைக்கப்படுகிறது.
 • இப்படிப்பட்ட கடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா என்று மனிதர்களிடம் கேட்டால்,
 • பெரும்பாலான மனிதர்கள், ஒரு டவுட்டாத்தான் இருக்கிறது என்று கூறுவார்கள்.
 • உண்மையிலேயே இருக்கிறாரா என்று நம்மையே பார்த்து திருப்பி கேட்பார்கள்.
 • ஏனென்றால் மனிதர்களில் பெரும்பாலோருடைய கடவுள் பக்தி, அவர்களின் பெற்றோர்கள் என்ன சொல்கிறார்களோ அதன் அடிப்படையில் தான் அமையப்பெற்றதாக இருக்கும்.

மனிதர்களில் பலர், 

 • “கடவுள் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? 
 • எனக்கு மூன்று வேளை உணவு கிடைக்கிறதா, அது போதும். அதை தெரிந்துக் கொண்டு நான் என்ன செய்ய போகிறேன்”,

என்று கூறுபவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

 • இருக்கிறது ஒரு வாழ்க்கை, அதை முழுசா அனுபவிச்சி வாழனும், செத்த பிறகு வாழ்க்கை இருக்கிறதோ? இல்லையோ?
 • கடவுளால் எனக்கென்ன லாபம்? கடவுள் எனக்கு என்ன கொடுப்பார்.
 • ஏதோ எங்க மூதாதையர்கள் சொன்னார்கள், அதனால் இந்த கடவுளுக்கு எப்போதாவது பண்டிகை மற்றும் விழாக்காலங்கள் வரும் போது பூஜை செய்கிறோம். அது கூட எங்களுக்கு வீண் செலவுதானோ என்று தோன்றுகிறது

என்று மனிதர்களில் பலர் கூறுவதை காணலாம்.

“ஏதோ எங்க பெற்றோர்கள் வாரா வாரம் வழிபாட்டுத்தலத்துக்கு போகனும் என்று சொல்லி விட்டார்கள்”

 • ஒரு நாலுபேரு எங்களை பார்த்து எதுவும் சொல்லிவிடக்கூடாதே என்பதற்காகவும்,
 • நாங்கள் கூட்டமாக இருந்தால் எங்களை யாரும் ஒன்றும் செய்யமாட்டார்கள் என்பதற்காகவும் கடவுளை கும்பிட போகிறோம்”

என்று கூறுபவர்கள்தான் இன்றைக்கு அதிகமாக இருக்கிறார்கள். 

 • மத சடங்குகளையும், மத சம்பிரதாயங்களையும் பெரும்பாலோர், மேல்மட்டமாக (for name sake) செய்துகொண்டிருக்கிறார்களே தவிர, பெரும்பாலான மனிதர்களுக்கு, இறைபக்தி ஆழ்மனதில் ஆழமாக இருக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
 • மனிதர்களில் பெரும்பாலானவர்களுடைய “கடவுளைப் பற்றிய ஞானம்” மற்ற மனிதர்களிடமிருந்து ( அது பெற்றோர்களாகவோ, நண்பர்களாகவோ, கணவனாகவோ, மனைவியாகவோ மற்ற மனிதர்களாகவோ இருக்கலாம்) பெறப்பட்ட ஞானமாகவும் இருக்கலாம், அல்லது புத்தகங்கள், இணையதளம் (internet) மூலமாக பெறப்பட்ட ஞானமாகவும் இருக்கலாம்

ஆகவேதான் இப்படிப்பட்டவர்களின் கடவுளைப்பற்றிய ஞானத்தை “பெறப்பட்ட ஞானம்” என்றும் அறிவைக் கொண்டு உழைத்து, ஆழ்ந்து சிந்தித்து ஆராய்ந்து பெறப்பட்ட சொந்த ஞானம் அல்ல என்றும் மகான்கள் கூறுகிறார்கள்.

மனிதர்களில் பெரும்பாலோர், கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? வேதங்கள் என்னதான் கடவுளைப்பற்றி சொல்கிறது என்று அறிவைக் கொண்டு, எல்லா வேதங்களையும் ஆராய்ந்து ஒரு தெளிவான முடிவெடுத்த பிறகு இதயப்பூர்வமாக இறைவன் மீது பக்தி செலுத்துவதில்லை

மனிதர்களில் பெரும்பாலோர், கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? வேதங்கள் என்னதான் கடவுளைப்பற்றி சொல்கிறது என்று அறிவைக் கொண்டு, எல்லா வேதங்களையும் ஆராய்ந்து ஒரு தெளிவான முடிவெடுத்த பிறகு இதயப்பூர்வமாக இறைவன் மீது பக்தி செலுத்துவதில்லை.

அறிவுப்பூர்வமாக இறைவனை நம்பி, இதயப்பூர்வமாக இறைவனை நேசித்து கடவுள் மீது பக்தி செலுத்தும் மனிதர்கள் இன்று மிக மிக அரிதாகவே காணப்படுகிறார்கள்.