கடவுள் இருக்கிறார் என்று மனம் ஏற்றுக்கொண்ட பிறகு அடுத்து செய்ய வேண்டியது என்ன?

இறைவன் இருக்கிறான் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டபிறகு, இறைவன், வேதத்தின் மூலம் என்ன கூறியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள முயற்சி செய்யவேண்டும் அல்லவா?

மக்களை வழிநடத்த இறைவன் தனது ஒளியை மகான்களுக்கு வழங்குகிறார் என்று வேதங்கள் கூறுகின்றன.

ஆதார வேத வசனம்:

(அகங்கார) மரணம் அடைந்த ஒருவனை நாம் உயிர்ப்பித்து எழுப்பினோம் – இன்னும் அவனுக்கு ஓர் ஒளியையும் கொடுத்தோம். அதைக்கொண்டு அவன் மனிதர்களிடையே நடமாடுகிறான. – இறுதி வேதம் 6 – 122

மனிதர்கள் நிம்மதியாக, ஆரோக்கியமாக வாழ்வதற்காகவே இறைவன், சொர்க்கத்திலிருந்து மகான்களை உலகிற்கு அனுப்புகிறார், அவர்களை பின்பற்ற வேண்டும் என்று வேதங்கள் மூலம் கூறியிருக்கிறார்.

ஆதார வேத வசனங்கள்:

ஆன்மீக குருவை அடைந்து உண்மையை அறிய முயற்சி செய். அவருக்குத் தொண்டு செய்து அவரிடம் அடக்கமாகக் கேள்விகள் கேட்டு ஆய்வு செய். உண்மையைக் கண்டவரான தன்னுணர்வு பெற்றோர் உனக்கு ஞானத்தை அளிக்க முடியும். –கீதை 4:34

ஞானிகள் யார் எனக் கண்டு அவர்களைச் சார்ந்து நில்., …உன் காலடி பட்டு அவர்களின் வீட்டு வாயிற்படிகள் தேயட்டும்.  –பைபிள் – சீராக்கின் ஞானம் – 6: 34,36

நம்பிக்கை கொண்டவர்களே! இறைவனுக்குக் கீழ்படியுங்கள்; இன்னும் (இறைவனின்) தூதருக்கும், உங்களில் (இறைவனிடமிருந்து) அதிகாரம் பெற்றவர்களுக்கும் கீழ்படியுங்கள் – இறுதி வேதம் 4:59

ஆக, மனிதர்கள் நிம்மதியாக அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ இறைவனுடைய அருளைப்பெற்று வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு மகானின் வழிகாட்டுதல் அவசியம் தேவை என்று வேதங்கள் மூலம் இறைவன் தெளிவாக கூறியுள்ளான்.

ஆனால் இந்த கலியுகத்தில், மகான் நிலையை அடையாமலேயே, தான் ஒரு மகான் என்று கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றும் போலி மகான்கள் அதிகமாக இருக்கின்றனர்.  இப்படிப்பட்ட சூழ்நிலையில் உண்மையிலேயே கடவுளின் தொடர்பு கிடைத்து, கடவுளின் அருளைப் பெற்று, மக்களை வழிநடத்தி வாழ்ந்துக்கொண்டிருக்கும், ஒரு உண்மையான மகானை எப்படி கண்டுபிடிப்பது என்று நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட இணைதளத்தை பார்க்கவும்

குறிப்புகள்: